2023 ஆசியக் கிண்ணம்:இந்தியா பாகிஸ்தானுக்கிடையே சர்ச்சை
பாகிஸ்தானில் 2023 ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகளை நடத்துவது தொடர்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கட் சபை என்பவற்றுக்கு இடையே ஒரு சர்ச்சையாக மாறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப்போட்டிகளை புறக்கணிக்க பாகிஸ்தானும் சில நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது
இந்தநிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர், 2023 ஆசியக் கிண்ணப்போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படாவிட்டால், அவை இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும், ஆசிய கிண்ண கிரிக்கட் மற்றும் உலகக் கிண்ணப்போட்டிகள் இரண்டின் இறுதிப் போட்டிகளிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்