பலாலி வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பில் கள விஜயம்

-மன்னார் நிருபர்-

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த மாதம் 03 ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள் குடியேற்ற வசதிகளை மேற் கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களின் மீள் குடியேற்றத்துக்கு திட்ட முன்னெடுப்புக்களை யாழ் மாவட்ட செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட பலாலி பகுதிகளில் உள்ள மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் பார்வையிடும் முகமாகவும் தற்காலிக வீட்டு திட்டங்களை வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கும் றகாமா நிறுவனம் மற்றும் நோர்வேயை தளமாகக் கொண்டு இயங்கும் போருட் நிறுவனம் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் மீள் குடி யேற்றத்தை விரைவுபடுத்தும் முகமாகவும் மீள்குடியேற்ற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முகமாகவும் பிரதேச செயலகத்துடன் இணைந்து அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்கான மேற்பார்வை விஜயமாக குறித்த விஜயம் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது

குறித்த விஜயத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சிவசிறி, றகாமா நிறுவன பணிப்பாளர் மரிக்கார், நேர்வே போரூட் அமைப்பின் திட்ட அமைப்பாளர் அனா இபலாலி கிரமசேவகர் உட்பட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்