மாணவர்களை கொடுமைப்படுத்திய பாடசாலை ஊழியர்கள் விளக்கமறியலில்

கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் நான்கு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு விடுதி மேற்பார்வையாளர்கள் பாடசாலையின் விடுதியில் வைத்து 10 மாணவர்களை தாக்கி கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி பிரதேசத்தில் நேற்று சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பணிப்பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தேகநபர்கள் 05 சிறுமிகள் மற்றும் 5 சிறுவர்கள் உட்பட 10 மாணவர்களைத் தாக்கி கொடுமைப்படுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒழுக்காற்று பிரச்சினையின் காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகக் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நான்கு ஆசிரியைகள் மற்றும் இரண்டு விடுதி மேற்பார்வையாளர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 2023 மார்ச் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டி பொது வைத்தியசாலையில் உள்ள நீதி வைத்திய அதிகாரி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பிரதேச பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.