-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- 10ம் கட்டை , கட்டுக்குளம் பகுதியில் யானை தாக்கிய நிலையில் சடலமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
வெல்கம் விகாரை பகுதியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் வயலுக்குச் சென்ற பொது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இதன்போது திருகோணமலை-அனுராதபுரம் வீதி -வெல்கம் விகாரை பகுதியைச் சேர்ந்த மாதர ஆராச்சிவிதானகே ஹரிச்சந்ர (53வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.