ஜப்பானினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீள தொடங்க நடவடிக்கை

ஜப்பானினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சுமார் 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியில் ஜப்பானால் மீள தொடங்கவுள்ளது.

இதில் முக்கியமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துதல், கொழும்பில் LRT ரயில் அமைப்பு, எரிசக்தி, நீர் வழங்கல், கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைத்த பின்னர் ஜப்பானால் தொடங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.