அமைதியான போராட்டங்களுக்கும் கடுமையான அடக்கு முறைகள் -மனித உரிமைகள் பேரவை

அமைதியான போராட்டங்களுக்கும் கடுமையான அடக்கு முறைகள்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான முக்கிய குழு, நாட்டில் இடம்பெறும் அமைதியான போராட்டங்களுக்கும் ‘கடுமையான’ அடக்கு முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும், எந்தவொரு எதிர்ப்பு தொடர்பான வன்முறைக்கும் பொறுப்புக் கூற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து,  மலாவி,  கனடா, வடக்கு மெசிடோனியா, மொண்டெனேகுரோ ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய குழு மனித உரிமைகளைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதில் குடியியல் சமூகத்தின் முக்கியப் பங்கை கோடிட்டுக் காட்டுவதாக தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கும் அதேவேளையில், நெருக்கடியிலிருந்து வலுவாக வெளியே வருவதற்கு சீர்திருத்தங்கள் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்