மின் வேலியில் சிக்குண்டு உயிரிழந்த யானையை புதைத்த சம்பவம் தொடர்பில் விசாரணை

-திருகோணமலை நிருபர்-

கப்பல்துறை-முத்துநகர் பகுதியில் திருட்டுத்தனமாக வயல் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் மின் வேலி அமைத்து மின் வேலியில் சிக்குண்டு உயிரிழந்த யானையை புதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் யானைக்காக மின்சாரத்தை பயன்படுத்திய போது யானை மின்சார கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் கொம்பன் யானையொன்று உயிரிழந்துள்ளதாக இன்று வியாழக்கிழமை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விஜய மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இது தொடர்பில் சீனக் குடா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

யானை உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கது.