பாடசாலையின் அடுத்த தவணையில் இரட்டிப்பு வேலைத்திட்டம்

பாடசாலையின் அடுத்த தவணையில் இரட்டிப்பு வேலைத்திட்டம்

பாடசாலையின் அடுத்த தவணையில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு இரட்டிப்பாக்கப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே “பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்படும் மதிய உணவு தேசிய வேலைத்திட்டம் அடுத்த தவணையில் இரட்டிப்பாக்கவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தை அமெரிக்க எய்ட் நிறுவனம், உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன இணைந்து அமைச்சுடன் மேற்கொள்கின்றது.

கல்வி அமைச்சு தற்போது 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கிறது.அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும்.”என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்