முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்து

-யாழ் நிருபர்-

முச்சக்கர வண்டியினை முந்த முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி நேற்று ஞாயிற்று கிழமை நண்பகல் வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மானிப்பாய் கோப்பாய் பிரதான வீதியில் உரும்பிராய் சந்திக்கு அண்மையாக மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்த முற்பட்ட வேளை எதிரே வருகை தந்த ஹைஏஸ் ரக வாகனத்துடன் மோதி வேலிக்குள் புகுந்து குடை சாய்ந்துள்ளது.

இதேவேளை முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்