ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை, அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவு ஒன்றில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.