ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

-பதுளை நிருபர்-

11160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹாலிஏல பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 3500 மில்லி கிராம் 3830 மில்லி கிராம் 3830 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு போகமடித்த ஹாலிஏல தபால் பொல வீதி ஹாலிஏல மற்றும் அத்தனாகொல்ல பகுதிகளை சேர்ந்த 29.25.28 வயதுடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்