பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு அச்சுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இனம் தெரியாத கும்பல் ஒன்றின் நடமாட்டம் காணப்பட்டுள்ளமை தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில் இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில், முகமூடிகள் அணிந்தவாறு கும்பல் ஒன்று சிறீதரனின் இல்லத்திற்கு முன்பாக செல்லுவது போன்று பதிவாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என்பதை, கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்