நக்கில்ஸ் மலைத் தொடரில் தற்காலிக கூடாரம் அமைத்தவர்கள் கைது

 

கண்டி- மாத்தளை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைச்சாரலில் சனிக்கிழமை இரவு தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி இருந்த 22 இளைஞர் யுவதிகள் உண்ணஸ்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை, கொழும்பு, பதுளை மற்றும் கண்டி போன்ற பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள், பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என 20 தொடக்கம் 30 வயதுடையவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாக்கபட வேண்டிய வனப்பிரதேசத்தில் தீ மூட்டுவது தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனுமதி இன்றி வனப்பிரதேசத்தில் பிரவேசித்து கூடாரம் அமைத்து தீ மூட்டி விருந்துபசாரம் மற்றும் கச்சேரி நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் முகப்புத்தகம் மூலம் இணைந்து நக்கிள்ஸ் ரிசர்வ் பகுதியில் முறையான அனுமதி பெறாமல் இவ்வாறு கூடாரம் அமைத்துள்ளதாக மூத்த வன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்