சா/த பரீட்சார்த்திகள் இருவர் மாயம்

நுவரெலியா மாவட்டத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரணத் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வருகைதந்த பாடசாலை மாணவிகள் இருவர், வீட்டுக்குத் திரும்பவில்லை என, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரு மாணவிகளும் செவ்வாய்க்கிழமை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக, பரீட்சை மத்திய நிலையத்துக்கு வந்துள்ளனர். அதிலொரு மாணவி, பெற்றோருடன் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இவ்விரு மாணவிகளும் நண்பிகள் என்றும், பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையத்துக்கு அண்மையில் இவ்விருவரும் நீண்டநேரம் கதைத்துக்கொண்டிருந்ததை பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் பலரும் கண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போது மாணவிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்