மத்திய வங்கியினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329.18 ரூபாவாகவும், விற்பனை விலை 339.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இருப்பினும், இன்றைய தினம் நாட்டின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையில் சற்று வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தற்போது பல்வேறு வங்கிகளின் அடிப்படையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 338 ரூபா முதல் 339 ரூபா வரையிலான விலை எல்லைக்குள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று காலை வேளையில் நாட்டின் சில உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினால் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் குறிப்பிடப்பட்டிருந்த விபரம் பின்வருமாறு:
இலங்கை வங்கி – கொள்வனவு: 329.75 ரூபா – விற்பனை: 338.75 ரூபா
மக்கள் வங்கி – கொள்வனவு: 328.13 ரூபா – விற்பனை: 338.46 ரூபா
சம்பத் வங்கி – கொள்வனவு: 327.69 ரூபா – விற்பனை: 338.50 ரூபா
கொமர்ஷல் வங்கி – கொள்வனவு: 328.06 ரூபா – விற்பனை: 338.00 ரூபா
ஹெச்.என்.பி (HNB) – கொள்வனவு: 329.50 ரூபா – விற்பனை: 339.00 ரூபா
செலான் வங்கி – கொள்வனவு: 329.25 ரூபா – விற்பனை: 339.50 ரூபா
2026ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.
2026 பெப்ரவரி பிற்பகுதியில் இருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட தாக்கங்களே இவ்வாறு ரூபாய் வீழ்ச்சியடைவதற்குக் காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 354 இலங்கை ரூபாவைத் தாண்டியிருந்தது.
கடந்த மே மாதம் 12ஆம் திகதி அது 354.03 ரூபாவாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது