வாத்துவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட ‘சாகரிகா’ ரயில் தற்போது வெற்றிகரமாக மீண்டும் தடம் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அந்த ரயில் வாத்துவ ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக ரயில் போக்குவரத்திற்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
விபத்தைத் தொடர்ந்து, ஒரு வழித்தடம் போக்குவரத்திற்காகத் திறந்துவிட அதிகாரிகள் நேற்று இரவே நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இன்று காலை நிலவரப்படி, தடம் புரண்டதால் ஏற்பட்ட சேதங்கள் பெரும்பாலும் சீர் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய திருத்தப் பணிகளும் மிக விரைவில் நிறைவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கரையோர ரயில் பாதையின் போக்குவரத்து தற்போது பெருமளவிற்கு வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.