தடம் புரண்டது ரயில்

வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ‘பொடி மெனிக்கே’ ரயில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக, மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடம் புரண்ட ரயிலை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்