அமெரிக்கா புறப்பட்டது இலங்கை குழாம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று செவ்வாய் கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டது.

இந்த போட்டி ஜூன் முதலாம் திகதி முதல் ஜூன் 29ம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணிக்கு வனிது ஹசரங்க தலைமை தாங்குவதுடன், அணியின் முகாமையாளராக மஹிந்த ஹலங்கொட கடமையாற்றவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் 15 வீரர்கள், 04 மேலதிக வீரர்கள் மற்றும் முகாமையாளர்கள், பயிற்சியாளர்கள், வைத்தியர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவும் இடம்பெற்றுள்ளது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் இகே-651 (EK – 651)என்ற விமானத்தில் இன்று டுபாய் செல்லும் இந்த இலங்கைக் குழு அங்கிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குச் செல்லவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்