சிறுபான்மை மக்கள் மத்தியில் போலி விம்பத்தினை உருவாக்க ஜனாதிபதி எத்தனிக்கின்றார்

-திருகோணமலை நிருபர்-

அண்மைக் காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு போலி விம்பத்தினை உருவாக்க எத்தனிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளருமாகிய அருன் ஹேமசந்திரா தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சி தாவல்களின் காரணமாக நீதிமன்ற தீர்ப்பினால் விரட்டியடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற பதவியை இழந்த ஒருவரை ஆளுனராக ஜனாதிபதி அவர்கள் நியமித்துள்ளார். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

நசீர் அஹ்மட் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது திருகோணமலை மாவட்டத்தில் ஷாபி நகர் எனும் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக பாரிய சுற்றுச் சூழல் தாக்கம் மற்றும் பாரிய பாலமொன்றும் உடைந்துள்ளது. இதற்கு முற்று முழுவதுமாக பொறுப்பு கூற வேண்டியவர் வட மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹாபீஸ் நசீர் ஆவார்.

குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்ததாக பதவி விலக்கப்பட்ட புவிச்சரிதவியல் நிறுவனத்தின் தலைவர் கூட இப்போது குறித்த ஆளுநருடன் இணைந்துள்ளார் இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்