சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டவர் கைது

இந்தியாவில் சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பில், இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பாம்பின் தோலை உரித்து, தண்ணீரில் அலசும் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து அவர் மீது வனத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க