பேருந்தில் உயிரிழந்த முதியவர்

 

கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த பேருந்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை டிப்போவிற்கு சொந்தமான இந்த பேருந்து இன்று புதன் கிழமை பிற்பகல் நிட்டம்புவ பிரதேசத்தை அண்மித்த போது, பின்புறயிருக்கையில் பயணித்தவர் சுகயீனமுற்றிருப்பதை அறிந்ததும் நிட்டம்புவ பொலிஸாருக்கு அருகில் நிறுத்தப்பட்டு அம்புயூலன்ஸ் வாகனத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் வைத்திய அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்ததையடுத்து, பொலிஸார் தலையிட்டு சடலத்தை வட்டுப்பிட்டியால ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இதேவேளை உயிரிழந்த முதியவரின் விபரம் வெளியாகவில்லை சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்