பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டுவிட்டு இரும்பு திருடியவர் கைது

-யாழ் நிருபர்-

 

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு இரும்புகளை திருடிய இளைஞர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கையை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்