இத்தாலியின் ரோம் நகரில் பணிபுரியும் இலங்கைப் பெண்ணைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் கணவரின் சடலம் நேற்று முன்தினம் புதன் கிழமை மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த கணவனும் மனைவியும் சில காலமாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதுடன் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை பலமுறை கத்தியால் குத்திய போது பலத்த காயங்களுக்குள்ளான பெண் வீதியில் ஓடியவாறு உதவி கோரி அலறிக் கொண்டிருந்ததைக் கண்ட இத்தாலியர்கள் சிலர் அவரை உடனடியாக 118 அம்பியூலன்ஸ் சேவை ஊடாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் குறித்த பெண்ணின் கணவனை கைது செய்ய சென்ற போது அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்