வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

காலி – குருந்தகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொட்டகொட – குருந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஹிச்சிமல்லி (வயது – 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

போதைப்பொருள் தகராறு காரணமாக வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் மூத்த சகோதரனும் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்