1,706 பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம்

தேசியப் பாடசாலைகளுக்காக இன்றைய தினம் புதன் கிழமை 1,706 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதேநேரம், இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் மூன்றுக்காக 60 நியமனங்களும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்