ஜூன் 7 – உலக உணவு பாதுகாப்பு தினம் : அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகஇ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 அன்று உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், உணவு விஷத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றி விழிப்புணர்வை மேற்கொள்வதை மையமாக வைத்து செயல்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
யாழ். சென்னை விமான சேவை 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என யாழ் இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கர் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடையும் நிகழ்வை கொண்டாடிய நிலையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விமான சேவையானது இரு நாட்டு இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவியது.
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கும் பொருளாதார மீட்சியை சரி செய்வதற்கும் இது நாட்டு விமான சேவை வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி ‘இந்தியாவுக்காக நான் கனவு காணும் எதிர்காலம் எமது அண்டை நாடுகளுக்கும் நான் விரும்பும் எதிர்காலம்’ எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
கதிர்காமம் பகுதியில் மகன் ஒருவர் தாயை தாக்கியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் முச்சக்கரவண்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தாயொருவர் தனது மகன் தன்னையும், குடியிருப்பாளர்களையும் தாக்குவதாக கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் முறைப்பாட்டினை விசாரிப்பதற்காக பொலிஸாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் 4 உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது மறைந்திருந்த மகன் முச்சக்கரவண்டியின் முன்பக்க கண்ணாடியை தடிகளால் தாக்கிவிட்டு பயந்து ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
மன்னம்பிட்டியவில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இரவு 8.40 மணியளவில் புகையிரதம் செல்லும் போது தண்டவாளத்தில் உறங்கிங் கொண்டிருந்த வயோதிபர் ரயில் சாரதியின் செயற்பாட்டால் உயிர் தப்பியுள்ளார்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் மன்னம்பிட்டிய காட்டுப் பகுதியால் சென்று கொண்டிருந்த போது எழும்ப முடியாமல் தண்டவாளத்தில் வயோதிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை அவதானித்த ரயில் சாரதி ரயிலை நிறுத்தி வயோதிபரை காப்பாற்றியுள்ளார்.
மேலும், போதையில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட 75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ரயிலில் ஏற்றப்பட்டு மன்னம்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் உடனடியாக செயல்பட்டு வயோதிபரின் உயிர் ரயில் சாரதியின் இந்த செயற்பாட்டை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
மொரகஹஹேன பிரதேசத்தில் க.பொ. த. சாதாரண பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி ஒருவருக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கோனாபொல பழனொறுவ மகா வித்தியாலயத்தின் பிரதான வாயிலின் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் (41013) ஏ. குலரத்ன என்பவருக்கே பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று காலை பரீட்சை நிலைய வாயிலில் கடமையிலிருந்தபோது மாணவி ஒருவர் கண்களில் கண்ணீர் வழிய பதற்றத்தோடு வந்துள்ளார்.குறித்த பொலிஸ் அதிகாரி மாணவியிடம் விசாரித்த போது. எனது அட்மிஷனை (பரீட்சை அனுமதி அட்டை) கொண்டு வர மறந்துவிட்டேன். இன்னும் சில நிமிடங்களில் பரீட்சை ஆரம்பமாகிவிடும். என்னால் பரீட்சை எழுத முடியாது என கூறி அழ ஆரம்பித்துள்ளார்.
பரீட்சை ஆரம்பமாக இன்னும் 8 நிமிடங்கள் மட்டுமே உள்ளதை உணர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் குலரத்ன, பாடசாலை பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ ஜீப்பில் வந்திருந்த பொலிஸ் அதிகாரியிடம் விரைந்து சென்று மாணவியின் இக்கட்டான நிலையை தெரிவித்தார்.
அந்த பொலிஸ் அதிகாரி மாணவிக்கு உதவ அனுமதியளித்ததால், மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு நான்கு கிலோமீற்றர் தூரத்தில் நாகாஸ் சந்தியில் உள்ள மாணவியின் வீட்டிற்குச் அழைத்துச் சென்றுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் செய்த உதவியால் மாணவி குறித்த நேரத்தில் பரீட்சையை எழுத முடிந்தது.
இந்நிலையில் மாணவிக்கு சரியான நேரத்தில் உதவிய பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
மதம் சார்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வௌியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நதாசா மற்றும் புரூணோவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நதாசா, புரூணோ இருவரும் இன்று செவ்வாய்கிழமை கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாண்ட்அப் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பௌத்த மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
அநுராதபுரம் இராஜாங்கனையில் கார் ஒன்றும், ஹயஸ் ரக வான் ஒன்றும் நேற்று செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர்.
விபத்தின் போது காரைச் செலுத்திச் சென்ற 67 வயதான வயோதிபரும்இ காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற ஐந்து வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, காரின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற, விபத்தில் மரணமடைந்த ஐந்து வயது சிறுமியின் தந்தை (வயது – 35), தாய் (வயது – 32) ஆகியோரும், ஹயஸ் வாகனத்தின் சாரதியான 28 வயது இளைஞரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் 13 வயது சிறுவன் மீது பத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த சிறுவன் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல தடவைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இன்று செவ்வாய் கிழமையும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான்.
பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் குறித்த சிறுவன் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அவை இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில அத்துகோரால மற்றும் கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அரச அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரச உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அபிவிருத்திகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்