திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் ரி20 கிரிக்கெட் போட்டி அங்குராப்பணம்

-கிண்ணியா நிருபர்-

ரி20 கிரிக்கெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த போட்டி தொடர் ரிங்கோ சுப்பர் 40 கிரிக்கெட் அணியினரால் தொடக்கி வைக்கப்பட்டது.

இதில் ஆறு அணிகள் கலந்து கொள்வதுடன் எட்டு போட்டிகள் இடம் பெறவுள்ளது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் நாணயச் சுழற்சி செய்து ஆட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

இவ்விளையாட்டுப் போட்டி நான்கு வாரங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்