
மாமனாரை கொலை செய்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்
-அம்பாறை நிருபர்-
தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆகியோரின் சமர்ப்பணம் வாதங்களை ஆராய்ந்த பின்னர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிவேரியன் கிராமம் பிரிவு-09 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட குடும்ப மோதலில் திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 62 வயதுடய மீராசாயிப் சின்னராசா என்பவர் மரணமடைந்திருந்தார்.
மாமனாரை கொலை செய்து விட்டு தலைமறைவான சந்தேகநபரான மருமகன் கைது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்