இலங்கை தமிழ் அரசு கட்சி கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

-கிண்ணியா நிருபர்-

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் சென்பக அம்மன் கோயிலில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

குறித்த கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ச. குகதாசன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.

விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டு கட்சி நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கட்சியின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இதில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்