போலி கடவுச் சீட்டை பெற்ற இலங்கையர் சென்னையில் கைது

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இந்தியாவின் கடவுச் சீட்டை பெற்ற இலங்கையர் ஒருவர் நேற்று புதன் கிழமை சென்னையில் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் இலங்கைக்கு வருவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் கடவுச் சீட்டை காண்பித்த போது, கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் தமது குடும்பத்தாருடன் இலங்கையிலிருந்து ஏதிலியாகத் தமிழகம் சென்று வசித்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியக் கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்