மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியை எதிர்த்தாடவுள்ள இலங்கை மகளிர் அணி

பங்களாதேஷில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ள இலங்கை மகளிர் அணி, இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியை எதிர்த்தாடவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் காலியில் ஜூன் 15, 18, 21ஆம் திகதிகளில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து மகளிர் சர்வதேச T20 கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டையில் ஜூன் 24, 26, 28ஆம் திகதிகளில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து மகளிர் T20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் அதன் பின்னர் அயர்லாந்துக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரிலும் இலங்கை விளையாடவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்