அனுராதபுரத்துக்கு விசேட போக்குவரத்து

பொசன் போயாதினத்தினை முன்னிட்டு அநுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று வியாழக்கிழமை முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அநுராதபுரம் புனித பூமிக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பஸ் மற்றும் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.

அநுராதபுரத்திற்கு வரும் மக்களுக்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஆண்டு பொசன் போயா தினத்தினை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்