அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார்.
விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண்ணே தற்போது பேசு பொருளாக மாறியுள்ளார்.
அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார்.
இவருடைய தந்தை பிரபலமான தொழிலதிபர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறப்பாக பங்களித்ததாகவும் விர்ஜின் விமான நிறுவனத்திற்கு கடமைப்பட்டுள்ளவனாக இருப்பேன் எனவும் அலே சேயர்ஸின் தந்தை கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
