திங்கட்கிழமை முடங்கவுள்ள தென்மராட்சி பிரதேசம்

-யாழ் நிருபர்-

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை மீள் இயக்குவதற்கும் தடைகளை உடைத்தெறியும் போராட்டம் மற்றும் கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்றையதினம் தென்மராட்சி பிரதேசங்கள் எங்கும் முன்னெடுக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் கடையடைப்பும் திங்கட்கிழமை 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக அணிதிரள்வோம் தென்மராட்சி என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்