வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து, முல்லைத்தீவு நோக்கி காலை 6.30 மணிக்கு பயணிக்கும் வவுனியா சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்தின் அளவு சிறியதாக உள்ளதால், பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர், என வவுனியா மாநகரசபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதனை கருத்தில் கொண்ட துணை முதல்வர், வவுனியா சாலை முகாமையாளருடன் கலந்துரையாடி போது, இன்று திங்கட்கிழமை முதல் பெரிய பேருந்தை வழங்குவதாக தெரிவித்திருந்தார்
இதனை தொடர்ந்து, இன்று காலை 6.30 மணிக்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்த பெரிய பேருந்து, முல்லைத்தீவு நோக்கி பயணத்தை ஆரம்பித்தது
இதன்போது வவுனியா இ.போ.ச சாலை முகாமையாளர் எம் வை எம் ரலீம் மற்றும் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோருக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.