இன்று பூமியை தாக்கும் சூரிய காந்த புயல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பிப்ரவரி 9 ஆம் திகதி முதல் பிப்ரவரி 10 ஆம் திகதிக்குள் நொடிக்கு 451 – 615 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான புவி காந்தப் புயலால் பூமி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் நாளை சனிக்கிழமை இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூமியின் வட அரைக்கோளத்தில் காந்த புயல் காரணமாக தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாமெனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஆய்வகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதற்கு முன்னாள் ஏற்பட்ட புவி காந்த புயல் பூமி மற்றும் விண்வெளியில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் பூமியைத் தாக்கிய புவி காந்த புயல் ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக ரேடியோ பிளாக் அவுட் விளைவை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்