மட்டக்களப்பில் சமூக சேவையாளர் ஒருவர், தனது தாய் தந்தையின் நினைவாக, வாகரை பிரதேசத்தில் நீண்ட காலமாக குடிநீர் இன்றி இன்றி கஸ்டப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
மனோன்மணி அறக்கட்டளை ஊடாக, நீண்ட காலமாக குடிநீர் இன்றி இருந்த மக்களுக்கு, 30 குடிநீர் கிணறு கட்டுவதற்கான அடிக்கல் இன்று புதன்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.

கோயில் போரதீவை சேர்ந்த அமரர் மார்க்கண்டு-பாக்கியம் மற்றும் அவர்களுடைய மகள் மனோன்மணி ஆகியோரின் ஞாபகார்த்தமாக, அவர்களின் புதவர்களான மா.நேசராஜா, மா.லிங்கராஜா ஆகிய இருவரின் பங்களிப்பில் வாகரை மற்றும் புளியங்கண்டடி கிராமங்களில் இக் குடிநீர் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அவர்களது உறவினர்களும் கலந்து கொண்டனர்.
