கொழும்பு மத்தேகொட பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருந்த ஆறு பாடசாலை மாணவிகள் நேற்று ஞாயிற்று கிழமை இரவு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் மூவர் 15 வயதுடையவரெனவும் இருவர் 16 வயதுடையவரெனவும் மற்றும் 18 வயதுடைய ஒரு யுவதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மத்தேகொட பொலிஸார் அவர்களை கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










