கொழும்பில் வாகனங்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மோசமாக நடந்துக் கொண்ட குறித்த சந்தேகநபர் நடத்திய தாக்குதல்களினால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மாகாண சபை கட்டடம் என்பனவும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவர், தலங்கம படபொத பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்