தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதை TMVP கட்சி உணர்ந்துள்ளது

தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உணர்ந்துள்ளது என்று நினைக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதித்தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை பிரதேச சபை சபா மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று வாகரை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஒரு இஸ்லாமிய சகோதரரை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் முன்மொழிந்து வழிமொழிந்துள்ளனர். ஆகவே அவர்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.