-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்-
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் 2024 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.
அதில் விவசாய உயர் தேசிய டிப்ளோமா உற்பத்தி தொழில்நுட்பவியல் பாடநெறிக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முக தேர்வு மற்றும் பரீட்சை கடந்த 04.01.2024 ம் திகதி நடைபெற்றது.
இருந்த போதிலும் உயர்தரப் பரீட்சை காரணமாக பல மாணவர்கள் நேர்முக தேர்வு, பரீட்சைக்கு தோற்றமுடியாமல் போனது.
பாடநெறிக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு கல்லூரியின் விவசாய டிப்ளோமா மற்றும் Trade section பகுதித்தலைவர் வரகுனராகவனின் தலைமையில் விரிவுரையாளர்களை கொண்டு நேற்று திங்கட்கிழமை இரண்டாம்கட்ட நேர்முக தேர்வு மற்றும் பரீட்சை நடைபெற்றது.

