பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைக்கும் முகமாக மன்னார் மாவட்டத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்தார்
மன்னார் கொன்வென்ட் வீதி, பெற்றாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

