யாழில் துருப்பிடித்த கம்பியுடன் ரோல்

-யாழ் நிருபர் –

யாழ்ப்பாணம் – மருதானார்மடத்தில் உள்ள கடை ஒன்றில் துருப்பிடித்த (4அங்குலம் ) கம்பி வைத்து செய்த ரோல் இன்று வெள்ளிக்கிழமை இரவு இனங்காணப்பட்டது.

குறித்த ரோலினை வாங்கி சாப்பிட்டவர் கம்பி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே ரோல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்