ராஜஸ்தான் சுரங்க விபத்து: 14 தொழிலாளர்கள் மீட்பு, ஒருவர் பலி

இந்தியாவின் ராஜாஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிய 14 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கத்தில் நேற்றைய தினம் செவ்வாய் கிழமை இரவு 8 மணியளவில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 15 பேர் சுரங்கத்தில் சிக்கிகொண்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் 2000 அடி ஆழம் கொண்ட குறித்த சுரங்கத்தில் இரவு நேரம் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு சிரமமாக இருந்ததால் இன்று புதன் கிழமை அதிகாலை மீட்பு பணியில் ஈடுபட்டு 14 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்