மாணவர்களுக்கு பண உதவிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த காசோலையினை தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி இன்று புதன் கிழமை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

இதில் தி/இ.கி.சாரதா வித்தியாலய மாணவியான டி.சதுர்சிகா, தி/கந்/முள்ளிப்பொத்தானை கனிஷ்ட வித்தியாலய மாணவன் ஆர்.பி.தினேத் கவின் மெத்சர ஆகியவர்களுக்கே இவ் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இலங்கை சமூக பாதுகாப்பு சபை ஓய்வூதிய திட்டம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் , சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர் மற்றும் பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்