
பிலியந்தலையில் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு
பிலியந்தலை – மஹரகம பிரதான வீதியை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்று ஞாயிற்று கிழமை அப்பகுதி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சிறிய மழை பெய்தாலும், பிரியந்தலை மற்றும் மஹரகம மாநகர சபைகளின் எல்லைகள் பிரியும் இடத்தில் வீதி முற்றாக நீரில் மூழ்கி போக்குவரத்து தடைப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரிவித்தும் தீர்வு கிடைக்காததால் இன்று அப்பகுதி மக்கள் குறித்த வீதியை வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்படாத வகையில் அபிவிருத்தி செய்யுமாறு கோரி, அரவலவெல சந்தியைக் கடந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், குறித்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்