மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 15 பேருக்கு விளக்கமறியல்

மூதூர் இருதய புரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 நபர்களை மூதூர் பொலிஸார் நேற்று முன் தினம் செவ்வாய் கிழமை கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நேற்று புதன் கிழமை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 15 நபர்களையும் எதிர்வரும் 03.07.2024 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்ட நபர்கள் அனுமதி இன்றி ஒன்று கூடியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸாரை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்