தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது நேற்று திங்கட்கிழமை அந்நாட்டு நேரப்படி மாலை 5.45 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதோடு 20 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான நிலையில் இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்வானில் அண்மை காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்