பல்வேறு பகுதிகளில் பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளரின் இடமாற்றத்தை கண்டித்து சுவரொட்டிகள்

இடமாற்றம் செய்யப்பட்ட பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளருக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் இன்று புதன் கிழமை ஒட்டப்பட்டுள்ளன.

துறைநீலாவணை, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, களுதாவளை, ஓந்தாச்சிமடம் இஎருவில், குறுமன்வெளி உட்பட பல இடங்களில் இவ்வாறு பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த காலங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் சிறீதரனுக்கு ஆதரவாக களுவாஞ்சிக்குடி, களுதாவளை, பழுகாமம், பெரியகல்லாறு போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றமை சுட்டிகாட்டதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்