நெடுஞ்சாலையில் விமானம் விபத்து :பயணித்த அனைவரும் பலி

பிரான்சில் சிறிய வகை விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் பாரிஸில் இருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்